• 1இரா 14:18 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம் பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கம் கொண்டாடினார்கள்.”
• 1இரா 15 :29, 30 “கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, பாஷா ராஜாவானபின் அவன் யெரொபெயாபின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.”
• 1இரா 16 :13 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.”
• 1இரா 16:34 “கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளைய குமாரனையும் சாகக்கொடுத்தான்.”
• 1இரா 20:26 “தீர்க்கதரிசி கூறியபடி மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம் பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம் பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.”
• 1இரா 22:38 “ஆகானின் இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.”
• 2இரா 1:17 “எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அகசியா இறந்து போனான்;”
• 2இரா 3:20 “எலிசா சொன்னபடி மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.”
• எலிசா சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி ராஜாவுக்கு கைலாகுகொடுக்கிற பிரதானி ஒலிமுகவாசலிலே ஜனங்கள் நெருக்கி மிதித்து செத்துப் போனான் – 2இரா 7:17
• ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி அசரீய ராஜா தன் கோவிலில் பணிந்து கொள்ளுகிறபோது அவனுடைய குமாரர்கள் அவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டனர் – 2இரா 19 :32 – 37
• கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன கர்த்தரின் வார்த்தையின்படியே கர்த்தருடைய ஆலயத்தில் சாலமோன் உண்டாக்கியிருந்த பொன்பணிமூட்டுகளையும், ஆலயத்திலிலுள்ள சகல பொக்கிஷங்களையும், அரண்மனையின் பொக்கிஷங்களையும் நேபுகாத்நேச்சார் எடுத்துக் கொண்டு பாபிலோனுக்குப் போனான் – 2இரா 24:13