Menu Close

நோவா

1. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள் நீதிமானும், உத்தமனுமாயிருந்தான் – ஆதி 6:9

2. நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான் – ஆதி 6:9

3. நோவா அவன் காலத்தில் ஒரு பேழையைப் பார்க்காத போதும், ஜலப்பிரளயத்தைக் காணாத போதும், தேவனுடைய வார்த்தையின்படி பேழையை உண்டு பண்ணினான் – எபி 11:7

4. எத்தனை நாள் பேழையில் தங்க வேண்டும் என்று தெரியாவிட்டாலும், துஷ்டமிருகங்களோடு எப்படி ஜீவிப்போம் என்று தெரியாவிட்டாலும், அனைத்தையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்தோடு நம்பினான் – ஆதி 6:19-21

5. அங்கு எல்லா மனிதரும் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணும் போது தன் குடும்பத்துக்கு தேவபக்தியையும், கீழ்படிதலையும் கற்பித்து, அவர்களை இரட்சிப்புக்கு வழி நடத்தினான் – ஆதி 7:7

6. நோவா தேவநீதியைப் பிரசங்கித்தான் – 2பேது 2:5

7. ஜலப்பிரளயத்திலிருந்து வெளியே வந்த பின் இனி கொஞ்ச மிருகம் தானே என்று எண்ணாமல் சுத்தமான மிருகங்களிலும், பறவைகளிலும் சிலவற்றை கர்த்தருக்குப் பலி செலுத்தினான். கர்த்தரை ஆராதித்தான். சுகந்த வாசனையாக கர்த்தர் முகர்ந்தார் – ஆதி 8:15-21

8. இவைகள் அனைத்திற்கும் மேலானது நோவா கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றவன் – ஆதி 6:8

Related Posts