ஏழு காலங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சார் தன் கண்களை ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அவன் தேவனை மகிமைப்படுத்தினான். இழந்து போன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டான். “அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம். அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். தேவன் தமது சித்தத்தின்படியே எல்லாவற்றையும் நடத்துகிறார். அவரை நோக்கி என்ன செய்கிறீறென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகளெல்லாம் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்” என்றான் – தானி 4:34 – 37