யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமோடு போருக்கு வந்தான். யோயாக்கீனை கர்த்தர் அவனிடம் ஒப்புக்கொடுத்தார். தேவாலயத்தின் பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிநெயாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதோடு இஸ்ரவேல் புத்திரரில் யாதொரு மாசு இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களுமாகிய சில வாலிபர்களையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றார்கள். அவர்களில் பதினாறு வயது நிரம்பிய வாலிபனான தானியேலும் ஒருவன் – தானி 1:1 –3