நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம் என்னவென்றால் ஒரு பெரிய மரம் தோன்றியது. அதில் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது. பறவைகள் அதில் அடைக்கலம் பெற்றன. அப்பொழுது வானில் ஒரு சத்தம் கேட்டது. அது என்னவென்றால் “இந்த மரம் வெட்டப்படும். ஆனாலும் அதின் வேராகிய அடிமரம் பூமியிலே இருக்கும். அதில் இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு வெளியில் பசும்புல்லில் தங்கி, பனியிலே நனையும். மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படும். உன்னதமானவரின் வல்லமையை அறிந்து தன்னைத் தாழ்த்தும் ஏழு காலங்கள் கடந்து போகும்” என்றது – தானி 4:10 – 16