நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர். அவர்கள் சிறையிருப்பில் மீந்தவர்கள் மகா தீங்கையும். நிந்தையையும் அனுபவிக்கிறார்கள் என்றும், எருசலேமின் அலங்கம் இடிபட்டும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாயிருக்கிறது என்றும் கூறினர். இதைக் கேட்ட நெகேமியா துக்கித்து, உபவாசித்து தேவனை நோக்கி மன்றாடினான் – நெகே 1:1 – 4