▪ நீதி 1:8 “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”
▪ நீதி 1:10 “என் மகனே பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.”
▪ நீதி 1:15 “என் மகனே தீயவர்களின் வழியில் நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.”
▪ என் மகனே, நீ உன் செவியைச் ஞானத்திற்குச் சாய்த்து உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளைப் பத்திரப்படுத்தி, …. கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய் – நீதி 2:1 – 5
▪ நீதி 3:1 “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.”
▪ நீதி 3:11 “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும் போது சோர்ந்து போகாதே.”
▪ நீதி 3:21 என் மகனே, கர்த்தருடைய ஞானத்தின் ஆழங்கள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பாயாக; மெய்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.”
▪ நீதி 4:10 “என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.”
▪ நீதி 4:20 “ என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.”
▪ நீதி 5:1, 2 “என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;”
▪ “அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.”
▪ நீதி 5:20 “என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழவவேண்டியதென்ன?”
▪ நீதி 6:1, 2 “என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு அன்னியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.”
▪ நீதி 6:3 என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்ட படியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.”
▪ நீதி 6:20 “என் மகனே,உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”
▪ நீதி 7:1 “என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.”
▪ நீதி 19:27 “என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் போதகங்களை நீ கேளாதே.”
▪ நீதி 23:15 “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் முகிழும்.”
▪ நீதி 23:19 “என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியில் நடத்து.”
▪ நீதி 23:26 “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.”
▪ நீதி 24:13 “என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.”
▪ நீதி 24:21 “என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.”
▪ நீதி 27:11 “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத் தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தை சந்தோஷப்படுத்து.”
▪ நீதி 31:2, 3 “என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,”
▪ “ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.”