▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.”
▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக ஒரு பாளையமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.”
▪ சங் 91:5, 6 “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,”
▪ “இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்க்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.”
▪ சங் 118:6 “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?”
▪ நீதி 3:24 “நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீபடுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.”
▪ நீதி 3:25 “சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்கடிப்பும் வரும்போது நீ அஞ்ச வேண்டாம்.”
▪ ஏசா 12:2 “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யெகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.”