1. தாவீது யோவாபுக்கு ஒரு நிருபம் எழுதி மும்முரமாய் நடக்கிற போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யச் சொன்னான் – 2சாமு 11:14 – 17
2. ஆகாபின் மனைவியாகிய யேசபேல் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி அவனுடைய முத்திரையைப் போட்டு நாபோத் இருக்கும் பட்டணத்திலே குடியிருக்கும் மூப்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் அனுப்பி “உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி பொய் குற்றங்களை சுமத்தி கல்லெறிந்து கொல்லச் சொன்னாள்.” அவள் கூறியபடியே செய்தனர் – 1இரா 21:8 – 11