Menu Close

நித்தியத்தைக் குறித்து

1. புதிய சூழல்: வெளி 21:1 “பின்பு, யோவான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டான்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று.”
2. தேவபிரசன்னம்: வெளி 21:3 “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”
3. வெளி 21:4 “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
4. மரணமற்ற நிலை: வெளி 21:4 “இனி மரணமுமில்லை.”
5. நமக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட இடம்: யோ 14:3 “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.”
6. இயேசுவைப் போலாவோம்: 1யோ 3:2 “இயேசு வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.”
7. புதிய சரீரம் கிடைக்கும்: 1கொரி 15:44 “ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்;”
8. எண்ணிப்பார்க்க முடியாத வியப்பைத் தரும்: 1கொரி 2:9 “தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.”

Related Posts