Menu Close

நாம் மௌனமாயிருக்க வேண்டிய இடங்கள்

1. எதிரிகள் முன்னிலையில்: எரிகோவின் அலங்கம் இடிந்து விழுவதற்காக யோசுவா ஜனங்களிடம் கர்த்தர் கூறியபடி மௌனமாயிருக்கக் கட்டளையிட்டார் – யோசு 6:10
2. மௌனிக்க வேண்டிய சூழ்நிலைகளில்: மௌனமாய் இருக்க வேண்டிய காலங்களில் மௌனமாய் இருக்க வேண்டும் என்று பிரசங்கி அறிக்கையிடுகிறான் – பிர 3:7
3. கொடிய காலத்தில்: தீமையான காலங்களில் மௌனமாயிருக்க வேண்டும் என்று ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகிறான் – ஆமோ 5:13
4. கர்த்தருடைய ஆலயத்தில்: கர்த்தருடைய ஆலயத்தில் மௌனமாயிருக்க வேண்டும் என்று ஆபகூக் தீர்க்கதரிசி கூறுகிறான் – ஆப 2:20
5. ஆண்டவருக்கு முன்: கர்த்தராகிய ஆண்டவருக்கு முன் மௌனமாயிருக்க வேண்டும் என்று செப்பனியா கூறுகிறான் – செப் 1:7

Related Posts