Menu Close

நாம் ஜெபிக்க வேண்டியவைகள்

1. பாவம்: தேவனுக்கும், நமக்குமிடையே பிரிவினை உண்டாக்கும். பாவத்திற்கு விரோதமாகப் போராடி ஜெபிக்க வேண்டும் – ஏசா 59:2
2. வியாதி: பெரும்பாலான வியாதிக்குக் காரணம் அசுத்த ஆவிகளும், பிசாசும். எனவே யாத் 15:26 ல் கூறியபடி நோய்களுக்குப் போராடி ஜெபிக்க வேண்டும்.
3. உலகம்: உலகத்திலுள்ள உபத்திரவங்களுக்கு உங்களை நீக்கலாக்கும்படி ஜெபிக்க வேண்டும் – யோ 16:33
4. இயற்கை: யோசுவா சூரியனைக் கட்டளையிட்டு தரித்து நிற்க வைத்தது போல எலியா கட்டளையிட்டு மழையை நிறுத்தியது போல நாமும் இயேசுவின் நாமத்தில் கட்டளையிட்டு ஜெபிக்க வேண்டும் – யோசு 10:12, 13, 1இரா 17:1
5. பிசாசு: ஆவியின் பட்டயத்தை எடுத்து பிசாசை ஜெபிக்க வேண்டும் – எபே 6:17
6. மரணம்: பரிசுத்த ஆவியின் வல்லமையால் நமது சிந்தைகளை நிரப்பி மரணத்தை ஜெபிக்க வேண்டும் – ஏசா 25:8
7. பாதாளம்: நாம் பாதாளத்துக்குச் செல்லுகிறவர்களை மீட்டெடுத்து பரலோகத்துக்கு அழைத்துச் செல்லுகிறவர்களாய் திகழ வேண்டும் – மத் 16:19

Related Posts