ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன் மடியில் வைத்து செல்லமாக வளர்த்தான். ஐசுவரியவானிடம் வந்த ஒரு வழிப்போக்கனுக்கு விருந்து கொடுக்க தன்னிடமுள்ள ஆடுகளில் ஒன்றை எடுக்காமல் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை கொன்று சமையல் பண்ணினான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாவீது மிகவும் கோபங்கொண்டு “இந்த காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்றும், அவன் அதற்காக நாலத்தனையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்றான்.” அதற்கு நாத்தான் “நீயே அந்த மனுஷன்” என்றான் – 2சாமு 12:1 – 5