Menu Close

நலம்

▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;”
▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.”
▪ சங் 119:72 “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.”
▪ பிர 4:9 “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்.”
▪ பிர 5:1 “மூடர் பலியிடுவதைப்போலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்.”
▪ பிர 5:5 “நீ நேர்ந்துகொன்டதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்.”
▪ பிர 6:9 “ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்;”
▪ பிர 7:2 “விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்.”
▪ பிர 7:3 “நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்.”
▪ பிர 7:5 மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.”
▪ பிர 9:18 “யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம்.”
▪ ஏசா 48:18 “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்.”
▪ மத் 18:9 “உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநாகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.”
▪ மாற் 9:43 “உன் கை இடறலுண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.”
▪ மாற் 9:45 “உன்கால் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.”
▪ 1 கொரி 7:9 “வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்.”
▪ தீர்க்கதரிசன வசனங்களை கவனித்திருப்பது நலமாயிருக்கும் – 2 பேது 1:19

Related Posts