யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து கிழவனான ஒரு தீர்க்கதரிசி இதைக் கேள்விப்பட்டு அவரைச் சாப்பிட வருந்தி அழைத்தான். அதனால் தேவமனிதன் தேவகட்டளையை மீறி அவனுடன் புசித்தான். அதன்பின் அவன் போகும் வழியிலே ஒரு சிங்கம் அவனைக் கொன்று போட்டது – 1இரா 13:11 – 32