1. தேவமக்கள் மீதிருக்கும் சாபத்தை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றுவார் – உபா 23:5
2. கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் அவருடைய அடியாளின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கச் செய்வார் – 2சாமு 7:29
3. தேவனுடைய ஆசீர்வாதம் தேவ ஜனத்தின்மேல் இருக்கும் – சங் 3:8
4. தேவமக்கள் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான் – சங் 24:5
5. கர்த்தருடைய ஆசீர்வாதம் தேவபிள்ளைகளுக்கு உண்டாகும் – சங் 129:8
6. கர்த்தர் என்றென்றைக்கும் தமது ஜனத்துக்கு ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுவார் – சங் 133: 3
7. தேவமக்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தைத் தரும். அதோடு வேதனையைக் கூட்டார் – நீதி 10:22