1. தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிபடுத்த பேசுகிறார்.
2. தேவன் மனிதர்களிடம் ஐக்கியம் கொள்வதற்கு பேசுகிறார்.
3. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பேசுகிறார்.
4. ஜனங்களோடு கூட உடன்படிக்கை பண்ணப் பேசுகிறார்.
5. ஜனங்களுக்கு சில வாக்குத்தத்தங்களைக் கொடுக்கப் பேசுகிறார்.
6. தம்முடைய சித்தத்தையும், திட்டத்தையும் மக்களுக்குத் தெரியப்படுத்தப் பேசுகிறார்.
7. ஒரு சிறப்பான ஒப்படைப்பை ஜனங்களுக்குக் கொடுப்பதற்கு தேவன் பேசுகிறார்.
8. தம்முடைய முடிவை ஜனங்களுக்கு வெளிப்படுத்தப் பேசுகிறார்.
9. தம்முடைய அனுமதியை வெளியிடுவதற்கு தேவன் பேசுகிறார்.
10. ஜனங்களுடைய பாவச் செயல்களுக்காக அல்லது கீழ்ப்படியாமைக்காக அவர்கள் மீதான நியாத்தீர்ப்பை அறிவிப்பதற்கு தேவன் பேசுகிறார்.
11. ஜனங்கள் சந்தேகத்திலும், பயத்திலும் இருக்கிற பொழுது அவர்களை ஸ்திரப்படுத்த மறுபடியும் உறுதிப்படுத்துவதற்கு, தம்முடைய நியாயப்பிரமாணங்களை அறிவிப்பதற்கு தேவன் பேசுகிறார்.
12. தாம் செய்யப் போகிறதை முன் கூட்டியே அவர்கள் அறிந்து கொண்டு அதற்காக அவர்களை தயார்படுத்துவதற்கு தேவன் பேசுகிறார்.