1. கிறிஸ்துவின் இரத்தமாகிய அரண்: கிறிஸ்துவின் இரத்தமாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சத்துருக்களுக்கும், கொள்ளைநோய்க்கும் தப்புவிக்கப்படுவோம்.
2. இரட்சிப்பாகிய அரண்: ஏசாயா தீர்க்கதரிசி பெலனான நகரத்துக்கு இரட்சிப்பை மதிலும், அரணுமாக ஏற்படுத்துவார் என்றார். இரட்சிப்பாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சாத்தானின் ஆதிக்கம் நம்மை நெருங்க முடியாது.
3. நீதிமான்களாகிய அரண்: சோதோம்கொமாராவை கர்த்தர் அழிக்க நினைக்கும்பொழுது ஆபிரகாம் கர்த்தரிடம் வேண்டிய பொழுது பத்து நீதிமான்கள் இருந்தால் கூட அந்த பட்டணத்தை அழிப்பதில்லை என்றார்.
4. கிறிஸ்துவின் நாமமாகிய அரண்: கர்த்தரின் நாமம் பலத்த துருகம். அதற்குள் நீதிமான் ஓடி சுகமாயிருப்பான். தாவீது கர்த்தரின் நாமத்தில் தான் கோலியாத்தை எதிர்த்து நின்று ஜெயம் பெற்றான்.