Menu Close

தேவன் தாங்கும் நேரம்

1. நித்திரை செய்யும் பொழுதும், விழிக்கும் பொழுதும் தாங்குகிறார்: சங் 3:5 “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.”
2. யுத்தகாலத்தில் தாங்குகிறார்: சங் 18:35 “உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது.”
3. உற்சாகமற்ற வேளையில் தாங்குகிறார்: சங் 51:12 “உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.”
4. விழுகிற வேளையில் தாங்குகிறார்: சங் 145:14 “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.”
5. பலவீன நேரத்தில் தாங்குகிறார்: ஏசா 41:10 “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
6. தாயின் வயிற்றில் உற்பத்தியாகும் வேளையில் தாங்குகிறார்: ஏசா 46:3 “தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன்.”

Related Posts