• 1ம் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினார். வெளிச்சத்துக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் – ஆதி 1:3-5
• 2ம் நாள் ஆகாய விரிவை உண்டாக்கி அதற்கு வானம் என்று பெயரிட்டார் – ஆதி 1:6-8
• 3ம் நாள் தேவன் வெட்டாந்தரையை உண்டாக்கி அதற்கு பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார். புல், பூண்டுகள், கனி விருட்சங்கள் முளைக்கக் கட்டளையிட்டார் – ஆதி 1: 9-13
• 4ம் நாள் வானத்திலே சுடர்களை உண்டாக்கினார். பகலை ஆளப் பெரிய சுடரையும், இரவை ஆளச் சிறிய சுடரையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார் – ஆதி 1: 14-19
• 5ம் நாள் நீரில் வாழும் ஜந்துக்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் உண்டாக்கினார் – ஆதி 1:20-23
• 6ம் நாள் நாட்டு மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், மனிதனையும் உண்டாக்கினார் – ஆதி 1:24-26