யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதைப் பார்க்கிறோம். அப்பொழுது யோவான் “நான் அல்பாவும் ஓமேகாவும் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கூறிய எக்காள சத்தம் போன்ற பெரிய சத்தத்தைக் கேட்டார். முடிவுகாலத்தில் நடக்கப் போகும் பலகாரியங்களை அவருக்கு தெரியப்படுத்திய பிறகு, உபத்திரவ காலத்திலும், மிகுந்த உபத்திரவ காலத்திலும் நடக்கப்போகிற காரியங்களைக் குறித்தும் கூறினார். “நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று தன் வருகையைக் குறித்தும் கூறினார் – வெளி 1ம் அதிகாரம்.