Menu Close

தேவனோடு யாக்கோபுக்கு இருந்த நேரடித்தொடர்பு

யாக்கோபு கண்ட கனவில் வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்ததையும் அதன் உச்சி மீது தேவன் நிற்பதையும் கண்டான். தேவன் தம்மை ஆபிரகாமின் தேவனென்றும், ஈசாக்கின் தேவனென்றும் அறிமுகம் செய்தார். தாம் அவனுக்கும், அவன் சந்ததிக்கும் தேவையான தேசம் முழுவதையும் தருவதாக வாக்குப்பண்ணி அவனை ஆசீர்வதித்தார் – ஆதி 28:11 – 22.
யாக்கோபு தேவனோடு முகமுகமான மற்றும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது – ஆதி 32:24 யாக்கோபு இரவு முழுவதும் போராடித் “தேவன் தன்னை ஆசீர்வதித்தாலொழிய அவரைப் போகவிடேன்.” என்று கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தேவன் அவன் பெயரை “இஸ்ரவேல்” என்று மாற்றியதோடு “மனிதரோடும் தேவனோடும் போராடி மேற்கொண்டாயே” என்று கூறி அவனை ஆசீர்வதித்தார். தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்று யாக்கோபு அந்த இடத்திற்கு “பெனியேல்” என்று பெயரிட்டார் – ஆதி 32:24-30

Related Posts