அப் 10:10 ல் பேதுரு மேல்வீட்டில் சென்று ஜெபிக்கத் தொடங்கியபோது ஞானதிருஷ்டியடைந்து தேவனுடைய சத்தத்தை மூன்று தடவை கேட்டான். – அப் 10:13 – 16 பெந்தகோஸ்தே நாளில் ஆதி அப்போஸ்தல சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தங்கள் வாழ்க்கையில் ஒரு ஆன்மீக விடியலைக் கண்டனர். அவர்கள் அனைவரும் அபிஷேகத்தில் பொங்கி வழியத் தொடங்கினர். அதன் பலனாக பேதுருவின் முதற்பிரசங்கத்திலேயே மூவாயிரம் ஆத்மாக்கள் மனமாற்றம் அடைந்தனர். தேவ வல்லமை பேதுருவுக்குள் நிரம்பிவழியத் தொடங்கியது.