தேவன் ஒருநாள் நோவாவோடு பேசி பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதாகவும்,
தான் மனங்கலங்கியதையும் கூறி வெள்ளத்தினால் பூமி முழுவதையும் அழிக்கும் தனது திட்டத்தையும் அவனுக்கு அறிவித்தார். நோவா குடும்பத்துடன் ஜலப்பிரளயத்திற்கு தப்பிக் கொள்ளும்படி, அவன் உண்டாக்க வேண்டிய பேழையைப் பற்றிய திட்டவட்டமான விபரங்களை தேவன் அறிவித்தார். தேவன் நோவாவோடு ஒரு உடன்படிக்கையையும் செய்து கொண்டார். நோவா நீதிமானும், உத்தமனுமாக இருந்தபடியால் அவனுக்குத் தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது. இதை வேதத்தில் ஆதியாகமம் 6, 7, 8, 9 அதிகாரங்களில் காணலாம்.