• தானியேல் பத்தாம் அதிகாரத்தில் தானியேல் மூன்று வாரம் வரைக்கும் துக்கித்துக் கொண்டிருந்த பின்னர் ஒரு மகிமையான தரிசனத்தில் தேவனோடு அவனுக்கு நேரடி அனுபவம் உண்டாயிற்று. அவன் ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷனுடைய உடல் படிக்கக் கச்சையைப் போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசம் போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபம் போலவும், அவருடைய புயங்களும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப் போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் போலவும் இருந்தது.
• அவருடைய சத்தத்தைக் கேட்ட தானியேலுடன் இருந்த மனிதர்கள் மிகவும் நடுங்கினர். தானியேலின் பெலனெல்லாம் போயிற்று. தானியேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு முகங்கவிழ்ந்து நித்திரையானவன் போல் கிடந்தார். ஒருகை அவனைத் தொட்டு முழங்கால்களையும், உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றியிருக்கத் தூக்கி வைத்தது. தானியேல் அவரோடு கூட உறவாடினான். அவர் அவனைத் தொட்டபோது அவன் தன் பெலனைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.