Menu Close

தேவனைத் துதிக்கக் கட்டளைகள்

1. பாடல் பாடி துதியுங்கள்: சங் 9:11 “சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.”
2. இசைகருவிகளோடு துதியுங்கள்: சங் 33:2 “சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.”
3. சகல ஜனங்களோடும் துதியுங்கள்: சங் 67:3 “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.” ஏசா 42:12 “கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.”
4. எப்போதும் துதிக்க வேண்டும்: எபி 13:15 “கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப்பலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”
5. வார்த்தைகளோடு துதிக்க வேண்டும்: 2நாளா 29:30 “வார்த்தைகளினால் கர்த்தரை துதியுங்கள்.”
6. சந்தோஷத்தோடு துதிக்க வேண்டும்: வெளி 19:7 “நான் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து கர்த்தருக்குத் துதிசெலுத்தக்கடவோம்”

Related Posts