1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி 32:24 – 28
2. மோசே ஒரேப் பர்வதத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கர்த்தர் முட்செடியில் காட்சியளித்து அவனது வாழ்க்கையை மாற்றினார். நாற்பது வருடங்கள் மாபெரும் தீர்க்கதரிசியாக இருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் கிருபை பெற்றார் – யாத் 3:1 – 10
3. கிதியோன் கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தபோது தூதன் தரிசனமாகி “நீ இருக்கிற பலத்தோடு போ” என்று கூறியது கோழையான கிதியோனை பராக்கிரமசாலியாக மாற்றி மீதியானியரை வெற்றி பெறச் செய்தது – நியா 6:11 – 16
4. சவுல் கழுதையைத் தேடிச் சென்றபோது சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய மனிதனாகி தீர்க்கதரிசனம் உரைத்தான் – 1சாமு 10:1 – 6
5. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசி அழைத்து சகோதரர்கள் முன்பாக அபிஷேகம் பண்ணியதும், அவனது வாழ்க்கை மாறியது. நாற்பது வருடங்கள் இஸ்ரவேலை அரசாண்டான் – 1சாமு 16:3
6. சவுல் தமஸ்குவுக்கு சமீபமானபோது ஒளி தோன்றி இயேசு அவனோடு பேசினார். சவுல் பவுலாகி, அப்போஸ்தலராகி, பெரிய, பெரிய அற்புதங்களை செய்தார் – அப் 22:1-, 15