1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13
2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார் – ஆதி 7:1-8, 15-17
3. ஆபிரகாமுடன் தேவன் அவனுடைய பிள்ளையற்ற தன்மையை மாற்றி அநேக ஜாதிகளுக்கு தந்தையாக்குவேன் என்றார் – ஆதி 15:2- 6, 17:16, 18:10-14
4. யாக்கோபுடன் எகிப்துக்குப் போகும்படி அறிவுரை வழங்கினார் – ஆதி 46:1-1 4
5. மோசேக்கு இஸ்ரவேலை விடுவிக்கும் கட்டளையைக் கொடுத்து பத்து நியாயப்பிரமாணக் கட்டளைகளையும் கொடுத்து உறவாடினார் – யாத் 3:1-10, 19:1-20
6. மோசே, மிரியாம்,ஆரோன் ஆகியோரை ஆசரிப்புக் கூடாரத்தண்டை வரச்சொல்லி குடும்ப விவாகரத்தில் தலையிட்டார் – எண் 12:4
7. யோசுவாவுடன் மோசேயுடன் இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்றார் – யோசு 1:5
8. சாமுவேலை வந்து தீர்க்கனாக இருக்கும்படி கூறினார் – 1சாமு 3:1-18
9. ஏசாயாவின் மூலம் மக்களிடத்துக்கு தம்முடைய செய்தியை அனுப்பி வைத்தார் – ஏசா 6:1-13
10. எரேமியாவைத் தமக்குத் தீர்க்கதரிசியாகும்படி அழைத்து உற்சாகமூட்டினார் – எரே 1:4-10
11. எசேக்கியாவின் வழியாக பின்வர இருந்த நியாயத்தீர்ப்பை உணர்த்த சித்தங்கொண்டார் – எசே 6:1, 7:27