Menu Close

தேவனது சிறப்பு செயல்கள்

1. தேவன் நன்மை செய்கிறவர் – அப் 14:17

2. தேவன் வானத்திலிருந்து மழையைக் கொடுக்கிறவர் – அப் 14:17

3. தேவன் ஆகாரத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறவர் – அப் 14:17

4. தேவன் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பிக்கிறவர் – அப் 2:22

5. தேவன் ஆலோசனைகளை நிர்ணயிப்பவர் – அப் 2:23

6. தேவன் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுகிறவர் – அப் 3:18

7. தேவன் உலகத் தோற்றமுதல் கூறியவைகளை நிறைவேற்றுகிறவர் – அப் 3:21

8. தேவன் உலகத்தோற்றமுதல் தமது கிரியைகளை அறிந்தவர் – அப் 15:18

9. தேவன் மரண உபாதிகளின் கட்டை அவிழ்ப்பவர் – அப் 2:24

10. தேவன் இஸ்ரவேலருக்கு மனந்திரும்புதலை அளிக்கிறவர் – அப் 5:31

11. தேவன் பாவமன்னிப்பை அருளுகிறவர் – அப் 5:31

12. தேவன் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினவர் – அப் 13:33

13. தேவன் பரிசுத்த ஆவியைத் தந்தருளுகிறவர் – அப் 15:8

14. தேவன் தமக்குக் கீழ்படிகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறவர் – அப் 5:32

15. தேவன் போரில் ஜெயிக்கிறவர் – அப் 5:39

16. தேவன் ஒருவராலும் தடுத்து கட்டுப்படுத்த முடியாதவர் – அப் 11:17

17. தேவன் இருதயங்களை அறிந்திருக்கிறவர் – அப் 15:8

18. தேவன் இருதயங்களை சுத்தமாக்குகிறவர் – அப் 15:9

Related Posts