Menu Close

தேவனது அழகு

1. வெளி 1:14 “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது.”

2. வெளி 1:15 “அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.”

3. வெளி 1:16 “தமது வலக்கரத்திலே ஏழுநட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.”

4. உன் 5:10 “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;”

5. உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமாயிருக்கிறது.”

6. உன் 5:12 “அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”

7. உன் 5 :13 “அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப் போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.”

8. உன் 5:14 “அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது.”

9. உன் 5:15 “அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப் போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப் போலவும் சிறப்பாயிருக்கிறது.”

10. உன் 5:16 “அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர்.”

Related Posts