1. வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே பெண் நியாயாதிபதி.
2. கணவன் பெயர் லபிதொத்.
3. தேவனுடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவள்.
4. பெண்கள் செல்லாத இடமான போர்களத்திற்கு விசுவாசத்தோடும், தைரியத்தோடும் சென்றவள்.
5. இஸ்ரவேலின் தாய் என்று பேர் பெற்றவள்.
6. பாரக்கிடம் தெபோராள் “கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக் கொடுப்பார். உனக்கு அந்த மேன்மை கிடையாது” என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி.
7. வெற்றியடைந்ததால் கர்வம் அடையாமல் கர்த்தருக்கு மகிமை செலுத்தியவள்.
8. குடும்பப் பெண்கள் கர்த்தருக்கென்று பணி புரியலாம், பணிபுரிய வேண்டும் என்பதற்கு தெபோராள் ஒரு சவாலாக திகழுகிறாள் – நியா 4:1-5:31