Menu Close

தீர்க்கதரிசிகளின் உரைகளில் சில சான்றுகள்

• எண் 11:25 “கர்த்தர் மேகத்தில் இறங்கி, மோசேயோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள் மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்;”.
• 1இரா 11:31 “அகியா தீர்க்கதரிசி யெரொபெயாமைமை நோக்கி: பத்து துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்து கோத்திரங்களைக் கொடுப்பேன்.”
• 1இரா 14 :12 “அகசியா தீர்க்கதரிசி யெரொபெயாமின் மனைவியிடம் நீ எழுந்து உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்துக்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.”
• 1இரா 20:22 “பின்பு அந்த தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக் கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.”
• 2இரா 3:17 “எலிசா இஸ்ரவேலின் ராஜாக்களிடம்: நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
• 2நாளா 20:37 “எலியேசர் யோசாபத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக்கூடாமற்போயிற்று.”
• எஸ்றா 5:1 “ஆகாய் தீர்க்கதரிசியும், இந்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.”
• எரே 26:18 “மீகா தீர்க்கதரிசனம் சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.”
• எரே 28:8 “எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியை நோக்கி: பூர்வகால முதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்ஜியங்களுக்கு விரோதமாகவும், யுத்தத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.”
• யூதா 14, 15 “ஏனோக்கும் இவர்களைக் குறித்து :இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.”

Related Posts