Menu Close

தீர்க்கதரிசிகளின் ஆணைகள்

1. ஏலி தீர்க்கன், அன்னாளிடம் கூறியது: 1சாமு 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.”
2. எலியா சாறிபாத் ஊரிலிலுள்ள விதவையிடம் கூறியது: 1இரா 17:13 “அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.”
3. எலிசா இஸ்ரவேலின் இராஜாக்களிடம் உரைத்தது: 2இரா 3:16 “கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.”
4. எலிசா தீர்க்கதரிசியின் மனைவியிடம் கூறியது: 2இரா 4:3, 4, 7 “அப்பொழுது எலிசா: தீர்க்கதரிசியின் மனைவியிடம் நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி,”
“உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவை பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.” (அவர் சொன்னபடி செய்து எண்ணெய் நின்றவுடன் அவரிடம் அறிவித்தாள்). “அப்பொழுது எலிசா: நீ போய் அந்த எண்ணையை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.”
5. எலிசா நாகமோனிடம் கூறியது: 2இரா 5:10 “அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னாள்.”

Related Posts