தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தி “ஆண்டவரே என்னுடைய எண்ணங்களையும், என்னுடைய மாம்சத்தையும் சிலுவையில் அறைகிறேன், அவைகளை வெறுமையாக்குகிறேன். அவைகள் ஒன்றுமில்லாமற் போவதாக. நீர் பேசும் பொழுது என்னுடைய சுயசித்தம் குறுக்கிடாமல் இருக்க கிருபை தாரும். அவைகளை உம்முடைய வல்லமைக்கு முன்பாக கீழ்படுத்துகிறேன்.” என்று ஒப்புக்கொடுங்கள்.