Menu Close

தீர்க்கதரிசனங்களின் தரம்

1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20
யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார் – ஆதி 49.
மோசே 12 கோத்திரங்களையும் ஆசீர்வதித்து தீர்க்கதரிசனம் உரைத்தார். – உபா 32, 33
2. எச்சரிக்கும்: உபாகாமம் 28ம் அதிகாரத்தின் கடைசியில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படியாதவர்களுக்கு என்னென்ன சாபங்கள் வருமென்று மோசே தீர்க்கதரிசனம் கூறியதைக் காணலாம்.
3. பாடல்களைப் பாட வைக்கும்: யாத் 15:20, 21 ல் மிரியாம் பாடிய பாடலைக் காணலாம். நியா 5:7, 9, 12, 20ல் தெபொராள், பாராக்கின் பாடல்களைக் காண்கிறோம்.
ஏசாயா 24, 29 அதிகாரங்கள், தானியேல் 7 முதல் 12 வரையுள்ள அதிகாரங்கள், வெளிப்படுத்தல் விசேஷங்கள் இவைகளெல்லாம் இனி சம்பவிக்கப் போகிறவைகளையும், நித்தியத்தையும் குறித்து நமக்குத் தெரிவிக்கிறது.
ஏசாயா 53ம் அதிகாரம் இயேசுவின் சிலுவைப்பாடுகளைப் பற்றியது.
யாத்திரகாமம் 15ம் அதிகாரம் மோசேயின் மீட்பின் பாடல்.
4. தனக்குத் தானே உரைக்க வேண்டும்: தாவீது தனக்குத் தானே தீர்க்கதரிசனம் உரைத்ததைக் காணலாம் – சங் 42:11
5. நியாயத்தீர்ப்பளிக்கும்: எலியா அகசியா வியாதியிலிருந்து பிழைக்கமாட்டான். கட்டிலிலிருந்து இறங்காமல் சாவான் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான் – 2இரா 1: 16

Related Posts