Menu Close

தீய தந்திரங்களின் தோல்வி

▪ எஸ்தர் ராஜாவிடம் ஆமானின் தீயதந்திரங்களைக் கூறியதால் அவனையும், அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப் போட்டார்கள் – எஸ் 9:25
▪ யோபு 5:12 “தந்திரக்காரர்களின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை கர்த்தர் அபத்தமாக்குகிறார்.”
▪ சங் 10:2 “துன்மார்க்கர் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.”
▪ சங் 33:10 “கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.”
▪ தீங்குசெய்வதற்கு விரைந்தோடுங் காலை கர்த்தர் வெறுக்கிறார் – நீதி 6:18
▪ நீதி 12:2 “துர்சிந்தனைகளுள்ள மனுஷனைக் கர்த்தர் ஆக்கினைக்குட்படுத்துவார்.”
▪ நீதி 6:14, 15 “அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பை பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.”
▪ “ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.”
▪ எரே 20:11 “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.”
▪ யோபு 12:17 “கர்த்தர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.”

Related Posts