தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினார்கள். தாவீது கர்த்தரிடம் போகலாமா எனக் கேட்டு சரி என்று சொன்னபின்பு சென்று வெற்றி பெற்றார். பாகால் பிராசீமில் முறியடித்தார். பின் திரும்பவும் அவர்கள் வந்த போதும் தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தான். கர்த்தர் நேராய்ப் போகாமல் பின்னாலே சுற்றி முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரே இருந்து பாயும்படி கர்த்தர் சொன்னார். முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்கிற இரைச்சலைக் கேட்கும்போது, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். தாவீது அப்படியே செய்து பெலிஸ்தியரைத் தோற்கடித்தான் – 2சாமு 5:17 – 25