Menu Close

தாவீது தன்னைத் தப்புவிக்க கர்த்தரிடம் வேண்டியது

▪ சங் 43 :1 “தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.”
▪ சங் 59:2 “அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.”
▪ சங் 71:4 “என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.”
▪ சங் 91:3 “கர்த்தர் என்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.”
▪ சங் 116:8 “என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணை கண்ணீருக்கும், என் காலை இடறலுக்கும் தப்புவித்தீர்.”
▪ சங் 140 :1 “கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.”
▪ சங் 143:9 “கர்த்தாவே என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்.”
▪ சங் 144:11 “அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.”

Related Posts