▪ சங் 6:9 “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
▪ சங் 6:9 “கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.”
▪ சங் 16:5 “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்;”
▪ சங் 18:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சண்யக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.”
▪ சங் 18:20 “கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.”
▪ சங் 18:28 “கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.”
▪ சங் 23:1 “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.”
▪ சங் 27:1 “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,”
▪ சங் 28:7 “கர்த்தர் என் பெலனும், என் கேடகமுமாயிருக்கிறார்.”
▪ சங் 116:1 “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூறுகிறேன்.”
▪ சங் 118:6 “கர்த்தர் என் பட்சத்திலிருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?”
▪ சங் 118:7 “கர்த்தர் என் பட்சத்திலிருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.”
▪ சங் 118:14 “கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்.”