தாவீது சிக்லாகு பட்டணத்திற்கு வந்து சேருவதற்கு முன் அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அங்கிருந்த தாவீதின் இரண்டு மனைவிகளையும் அங்குள்ளவர்களையும் சிறைபிடித்துக் கொண்டு போனார்கள். சகல ஜனங்களும் தாவீதின் மேல் கல்லெறிய வந்தனர். தாவீது கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கர்த்தரிடம் அவர்களோடு போர் செய்யலாமா எனக் கேட்டு கர்த்தர் சம்மதம் கொடுத்தவுடன் அமலேக்கியரை வென்று அவர்கள் பிடித்துக் கொண்டு போன இரண்டு மனைவிகளையும், அவர்கள் கொள்ளையாடிக் கொண்டுபோன எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான் – 1சாமு 30:1 – 19