Menu Close

தாவீதின் இருதயம் இருந்த விதம்

1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்: தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை – 2சாமு 16:10
2. பாவத்தை அறிக்கை செய்யும் இருதயம்: தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தபோது, அதை நாத்தான் தீர்க்கதரிசியிடம் ஒத்துக் கொண்டு கர்த்தரிடம் அறிக்கை செய்தான் – 2சாமு 12:13
3. தேவனிடம் விசுவாசம் நிறைந்த இருதயம்: இராட்சதனான கோலியாத்தை வெல்ல தேவனால் கூடும் என்று தேவனிடம் விசுவாசம் வைத்து வென்றான் – 1சாமு 17:45
4. சுத்த மனசாட்சியுள்ள இருதயம்: ஜனங்களை எண்ணியதால் பாவஞ் செய்தேன் என மனசாட்சி வாதிக்கப்பட்டு கர்த்தரிடம் முறையிட்டான் – 2சாமு 24:10
5. ஊழிய ஆவியில் நிறைந்த இருதயம்: தேவனுடைய சித்தத்தினால் ஊழிய ஆவியில் நிறைந்து ஊழியம் செய்தான் – அப் 13:36

Related Posts