தானியேல் தரிசனத்தில், நதிக்கரையில் ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வெள்ளாட்டுக்கடாவும் வருவதைக் கண்டான். அது வருங்கால ராஜ்ஜியங்களைக்குறித்த தரிசனமாகும். தரிசனத்தில் கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதிய, பெர்சிய தேசங்களின் ராஜாக்கள். வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா. அது முறிந்துபோன போது எழும்பின கொம்புகள் என்னவென்றால் முதலாம் ராஜாவுக்குப்பின் எழும்பும் நான்கு ராஜ்ஜியங்கள். அவர்களுடைய ராஜ்ஜியபாரத்தின் கடைசிகாலத்தில் மூர்க்கமான ஒரு ராஜா எழும்புவான். அவன் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். ஆனாலும் அவன் கையினால் அல்லாமல் வேறுவிதமாய் அழிந்து போவான் – தானி 8:1 – 27