Menu Close

தரித்திரத்துக்கான காரணங்கள் பற்றி நீதிமொழிகளில்

1. சோம்பலான தூக்கம்: நீதி 6:10, 11 “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?”
“உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனை போலவும் வரும்.”
2. சிற்றின்பப் பிரியன்: நீதி 21:17 “சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்;”
3. புத்திமதிகளைத் தள்ளுதல்: நீதி 13:18 “புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும், இலச்சையையும் அடைவான்;”
4. பிசினித்தனம்: நீதி 11:24 “அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.”
5. வீணரைப் பின்பற்றுதல்: நீதி 28:19 “வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.”
6. பதறுகிற நினைவு: நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.”
7. குடியனும், போஜனப்பிரியனும்: நீதி 23:21 “குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்.”

Related Posts