இஸ்ரவேல் ஜனங்கள் புறப்படும் போது, மோசே, கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப் படுவார்களாக என்பான். ஜனங்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே கர்த்தருடைய கோபம் மூண்டது. கர்த்தருடைய அக்கினி பற்றி எரிந்து பாளையத்தின் நடுவிலிருந்த சிலரைப் பட்சித்தது. ஜனங்கள் மோசேயைக் கூப்பிட்ட போது, மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி அக்கினியை அவிந்து போகப் பண்ணினான். அந்த இடத்துக்கு தபேரா என்று பெயரிட்டனர் – எண் 11:1 – 3