Menu Close

தசமபாகம் பற்றிய வேதவிளக்கம்

1. தசமபாகம் சட்டம் இல்லாதிருக்கும்போது ஆபிரகாம் பத்தில் ஒரு பங்கு கொடுத்தான் – ஆதி 14:20
2. யாக்கோபும் தானாகவே “நீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று பொருத்தனை பண்ணிக் கொண்டான் – ஆதி 28:22
3. இஸ்ரவேல் தனி நாடான போது நாட்டிலுள்ள நிலத்தின் வித்திலும், மரங்களின் கனியிலும் தசமபாகமெல்லாம் கர்த்தருக்குரியது. அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று ஆண்டவர் கட்டளையிட்டார் – லேவி 27:30
4. இயேசுவின் நாட்களில் வேதபாரகரும் பரிச்சேயரும் புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கு கொடுத்துவிட்டு நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள். எனவே தசமபாகம் செலுத்தும்போது செயலின் அன்பை விட்டுவிடக்கூடாதென்று இயேசு அவர்களுக்குப் போதித்தார் – மத்.23:23
5. கிறிஸ்துவுக்குப் பின் புதிய உடன்படிக்கை அமுலுக்கு வருகிறது. அதில் தசமபாகத்தைக் குறித்த சட்டம் எதுவுமில்லை. புதிய உடன்படிக்கை மேலான உடன்படிக்கை ஆனதால் கொடுப்பதைக் குறித்து மேலான முறைகள் அதில் போதிக்கப்பட்டிருக்கின்றன.
1. உற்சாகமாய் கொடுத்தல் – 2கொ 9:7
2. தாராளமாய்க் கொடுத்தல் – 2கொ 8:2
3. தியாகமாய்க் கொடுத்தல் – 2கொ 8:3
எனவே தசமபாகம் இன்று நமக்கு துவக்கக் கட்டமாயிருக்கலாம். ஆனால் அதில் வளர வேண்டும் தனக்கிருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள். அந்த விதவை தான் சேர்த்து வைத்த எல்லாவற்றையும் மரியாள் கொட்டிவிட்டாள். இருவரையும் இயேசு எவ்வளவாய் பாராட்டினார்.

Related Posts