Menu Close

ஞானதிருஷ்டியடைந்தவர்களும், அவர்கள் செய்தவைகளும்

1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால் பேதுருவை அவனுடைய வீட்டுக்குப் போகும்படி கர்த்தர் தரிசனத்தைக் கொடுத்தார் – அப் 10:11 – 16
2. பவுல் ஞானதிருஷ்டியடைந்தான்: பவுல் தமஸ்குவுக்குச் சமீபித்தபோது ஞானதிருஷ்டியால் இயேசுவையும் அவருடைய சத்தத்தையும் கேட்டான் – அப் 9:3,7
3. யோவான் ஞானதிருஷ்டியடைந்தான்: யோவான் ஞானதிருஷ்டியால் ஏழு சபைகளுக்கும் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டார் – வெளி 1:10, 11
4. மோசே ஞானதிருஷ்டியடைந்தான்: மோசே பத்து கற்பனைகளையும், பத்து உடன்படிக்கையின் வார்த்தைகளையும் ஞானதிருஷ்டியால் பலகையில் எழுதினான் – யாத் 34:28, 29
5. பிலேயாம் ஞானதிருஷ்டியடைந்தான்: பிலேயாம் ஞானதிருஷ்டியால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்ன சொல்லவேண்டும் என தேவனருளிய வார்த்தைகளைக் கேட்டுக் கூறினான் – எண் 24:15 – 24
6. எசேக்கியேல் ஞானதிருஷ்டியடைந்தான்: எசேக்கியேல் ஞானதிருஷ்டியால் கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனத்தைக் கண்டான் – எசே 1:28
7. தானியேல் ஞானதிருஷ்டியடைந்தான்: தானியேல் ஞானதிருஷ்டியால் தரிசனத்தில் தேவனுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டான் – தானி 10. 8, 9
8. ஏசாயா ஞானதிருஷ்டியடைந்தான்: ஏசாயா ஞானதிருஷ்டியால் பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூப்பிடுகிறவர்களின் சத்தத்தைக் கேட்டார் – ஏசா 6:1 – 9
9. பேதுரு, யாக்கோபு, யோவான் ஞானதிருஷ்டியடைந்தனர்: பேதுருவும் யாக்கோபும் யோவானும் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் பேசுவதைக் கேட்டனர் – மத் 17:1- 7

Related Posts