காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய் அந்த நிலத்தை வாங்கி அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்கபலிகளையும், சமாதானப்பலிகளையும் செலுத்தினான். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நிறுத்தினார் – 2சாமு 24:17, 18, 24, 25