Menu Close

சொந்தக்காரர்களும், மற்றவர்களும் யோபுவிடம் நடந்து கொண்டவிதம்

1. யோபுவின் சகோதரர்கள் தூரப்போனார்கள். அறிமுகமானவர்கள் அந்நியராய்ப் போனார்கள் – யோபு 19:13
2. யோபுவின் பந்துஜனங்கள் விலகிப் போனார்கள். அவனை மறந்து விட்டார்கள் – யோபு 19:14
3. யோபுவின் வீட்டு ஜனங்களும், வேலைகாரிகளும் அவனை அன்னியராய் எண்ணினார்கள். அவர்கள் பார்வைக்கு யோபு பரதேசியானான் – யோபு 19:15
4. யோபு வேலைக்காரர்களைக் கெஞ்சிக் கூப்பிட வேண்டியதாயிற்று – யோபு 19:16
5. யோபுவின் சுவாசம் கூட மனைவிக்கு வேறுபாடாயிருந்தது. கர்ப்பத்தின் பிள்ளைகளை நினைத்து உருகினார் – யோபு 19:17
6. சிறுபிள்ளைகளும் யோபுவை அசட்டை பண்ணினார்கள் – யோபு 19:18
7. யோபுவின் பிராண சிநேகிதர்கள் அவனை வெறுத்தனர். அவனுடைய சிநேகிதர்கள் அவனுக்கு விரோதிகளானார்கள் – யோபு 19:19

Related Posts