Menu Close

செருபாபேலும், ஆலயமும்

செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின் ஒன்றாய் கூடி பலிபீடத்தைக் கட்டினார்கள். பலிகள் தொடரப்பட்டது. ஆலய அஸ்திபாரம் போடப்படவில்லை. எருசலேமுக்கு வந்து இரண்டு வருடம் இரண்டு மாதம் சென்றபின் கோரேஸ்ராஜாவின் கட்டளைப் படி செருபாபேலும், யோசுவாவும் மற்றும் அநேகரும் சேர்ந்து ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட ஆரம்பித்தார்கள். மகாசத்தமாய்த் துதித்துப் பாடினார்கள். ஆவியானவரால் ஏவப்பட்டபடி ஜனங்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினார்கள். செருபாபேல் தான் தொடங்கிய ஆலயம் கட்டும் பணியைத் தானே நிறைவேற்றும் கிருபையைத் தேவனிடமிருந்து பெற்றார் – எஸ்றா 2:1 – 70, 3:1 – 13, 5:2, நெகே 12:1 – 26

Related Posts