சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக் கூப்பிட்டு “ஒரு பிராண உற்பத்தி கால கட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றார்.” அதன்படியே அந்த ஸ்திரீ குமாரனைப் பெற்றாள். இன்னுமொரு தடவை அந்த ஸ்திரீயிடம் எலிசா “ஏழு வருடம் அந்த ஊரில் பஞ்சம் வரும் நீ வேறு எங்கேயாவது போய் சஞ்சரி” என்று வரப்போகிற பஞ்சத்தை முன்னறிவித்தார். அதன்படி அவளும் பெலிஸ்தியர் தேசத்தில் போய் குடியிருந்தாள் – 2 இரா4:8 – 17